(எம்.மனோசித்ரா)
அந்நிய செலாவணி இருப்பு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உரித்துடைய இடங்களை வெளிநாட்டு சக்திகளுக்கும், உள்நாட்டு தனவந்தர்களுக்கும் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. எனவே நாட்டு பிரஜைகள் அனைவரும் தமக்கு உரித்துடைய இடங்களைப் பாதுகாப்பதற்கு அச்சமின்றி அடிமை மனநிலையிலிருந்து விடுபட்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பலவந்தமாக மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கும் சகல அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்துள்ளதால் அந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் முக்கிய இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. தற்போது எமது நாட்டில் இடம் விவகாரத்தில் சூது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாதாரண மக்களிடமிருந்து இடங்களைப் பெற்று அவற்றை தனவந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
2019 தேர்தலின் போது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதே போன்று தற்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருகின்றனர். எனவே நாட்டு மக்கள் அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். இங்கு யாரும் அடிமைகள் அல்ல. நாட்டு பிரஜைகளுக்கு சொந்தமான இடங்களை அவர்களிடமிருந்து பறிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதற்காக சட்ட ரீதியாக நாம் மக்களுடனிருப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM