(செ.தேன்மொழி)
சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையளத்தளத்தில் வெளியிடும் நபர்களை கைது செய்வதற்காக சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வு பிரிவினர், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியன அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு நூறு காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றியதாக கூறப்படும் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.