சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாயின் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்: பூண்டுலோயா நகரில் போராட்டம்

Published By: Digital Desk 8

01 Aug, 2021 | 02:37 PM
image

டயகம சிறுமி ஹிசாலினியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட கோரியும் மலையகத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் காணப்படுவதாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளதையடுத்து, சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மீள்  பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், சிறுமி ஹிசாலிணியின் பிரேத பரிசோதனை சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெற்று அவரின் உயிரிழப்புக்கு சரியான நீதி கிட்ட வேண்டும்.



மலையகத்தின் எதிர்கால சிறுவர்களின் உயிர் மற்றும் உரிமை பாதுகாப்புக்கு சிறுமி ஹிசாலினியின் மரணம் ஒரு ஒளியை வழங்க வேண்டும், சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும், அவரின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, இன்று (01.08.2021) காலை நுவரெலியா மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில், பூண்டுலோயா நகரில் பூண்டுலோயா தோட்ட மக்கள், இன்று (01.08.2021) காலை ஒருமணி நேரம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் பூண்டுலோயா நகரில் ஊர்வலமாக சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11