(செ.தேன்மொழி)

பதுளை - ஹாலியெல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 19 வயதுடைய யுவதி மற்றும் 45 வயதுடைய பெண் ஆகியோரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கா ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய -அம்பகஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தோஷ நிவரத்திக்கான மாந்திரீக செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்து குறித்த வீட்டிலிருந்த பெண்கள் இருவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹாலியெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.