கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பான விளையாட்டுகளை நடத்த விதிக்கப்பட்ட விதிகளை மீறியதற்காக ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான ஆறு நபர்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை 2020 டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அதேநேரம் வெளிநாட்டு ஒலிம்பிக் வீரர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் 2020 டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்  தோஷிரோ முட்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.