எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று (06) இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதற்காக சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.