9 மணிநேரம் 2 ஆவது பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது ஹிஷாலினியின் சடலம் ; உட்காயம் , எலும்பு முறிவுகள் தொடர்பிலும் பரிசோதனை

31 Jul, 2021 | 09:42 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று சனிக்கிழமை பேராதனை போதனா வைத்தியசாலையில் 9 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

பரிசோதனையின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட சடலத்தின் உடற்பாக மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த பகுப்பாய்வு அறிக்கையும் கிடைக்கப் பெற்ற பின்னர் முழுமையான இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயிரிழந்த சிறுமியின் இரண்டாவது பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக  கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ அறிவியல்  தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் பிரிவின் பிரதானி சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சமீர குணவர்தன , பேராதனை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற மருத்துவ அறிவியல்  தொடர்பான விசேட நீதிமன்ற வைத்திய நிபுணர் பிரபாத் சேனசிங்க ஆகியோர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டது.

இக்குழுவின் முன்னிலையில் இன்றையதினம் சிறுமியின் இரண்டாவது பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. காலை 8.30 க்கு இப் பிரேத பரிசோதனைகள் ஆரம்பமாகி மாலை 5.15 வரையான 9 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

இதன்போது மேற்கூறப்பட்ட விசேட மருத்துவ குழுவினரால் சடலம் சி.ரி.ஸ்கேன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

சடலத்தில் காணப்படுகின்ற உட்காயம் மற்றும் எலும்பு முறிவுகள் என்பன தொடர்பில் இனங்காண்பதற்காக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரேத பரிசோதனையின் போது , சடலத்தின் சில உடற்பாகங்களின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. 

இந்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வின் முடிவுகளும் கிடைக்கப் பெற்ற பின்னர் இது தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்தோடு சிறுமியின் சடலத்தை முழுமையான அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் வரை பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதன் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28