(எம்.மனோசித்ரா)

கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தினூடாக ஜப்பானிலிருந்து இன்று சனிக்கிழமை மாலை 7 இலட்சத்து 28 460 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. 

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 என்ற விமானத்தின் ஊடாக இந்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இம்மாதம் 7 ஆம் திகதி மேலும் 7 இலட்சத்து 30 ஆயிரம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளும் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இலங்கைக் கொண்டு வரப்பட்டுள்ள அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளில் 4,90 000 தடுப்பூசிகளை முதற்கட்டமாக அஸ்ட்ராசெனிகாவைப் பெற்றோருக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இதுவரையில் 13.8 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இவற்றில் 925 242 தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும் , 385 885 தடுப்பூசிகள் இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.