முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று (06) பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு  எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட 5 வழக்குகள் தொடர்பிலேயே பிரதம நீதவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.