வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு(30.07.2021)இடம்பெற்ற வாகன விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகை பயணித்த வாகனம் நுவரெலியா - தலவாக்கலை வீதியிலுள்ள லிந்துல பகுதியில் பள்ளத்தில் விழுந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடக படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, பின்னர் அவர் மீண்டும் கொழும்புக்கு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹயசிந்த் விஜேரத்ன இறக்கும் போது அவருக்கு வயது 75 என தெரியவந்துள்ளது. 

விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்திய சாரதி லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.