வறுமையை காரணம் காட்டி மலையக பிள்ளைகள் பல்வேறு வகையில் சுரண்டப்படுகின்றனர் - அருட்தந்தை எபனேசர் ஜோசப்

Published By: Digital Desk 3

31 Jul, 2021 | 12:49 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

18 வயதுக்கு குறைந்தவர்களை தலைநகர் மற்றும் நாட்டின் சகல பாகங்களிலும் வீட்டு வேலைக்கு அமர்த்துதல், கடைகளில் தொழில் புரிதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். 

குறிப்பாக வறுமைக் கோட்டில் வாழும் மலையக பிள்ளைகளை குறிவைத்தே இத்தகைய தொழில்களில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை சுரண்டுவதுடன், அவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகங்களுக்கும், மன ரீதியான இம்சைகளுக்கும் ஆளாக்குகின்றனர் என இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் தலைவரும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவருமான அருட்திரு. எபனேசர் ஜோசப் தெரிவித்தார்.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் நிலவுகின்ற கொவிட் 19 கொரோனா தொற்றும் தடுப்பூசி ஏற்றும் சுகாதார செயற்பாடுகள், 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல், மலைய மக்களின் அவல நிலை,  மாணவர்களின் கல்வி நிலை  உள்ளிட்ட சமகால பிரச்சினைகள்  குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது. 

இதன் போது கருத்து தெரிவித்த அருட்திரு. எபனேசர் ஜோசப்,

"கொவிட் 19 கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக எமது நாடு பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது. இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக கருதப்பட்டாலும், கொவிட் 19 அனர்த்தத்தையடுத்து நாம் பலவீனமான நாடாகவே இருக்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் பெருந்தோட்ட துறையில் தொழில்புரியும் மலையக சமூகத்தினருக்கு கல்வி, சுகாதாரம்,  அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து, தொடர்பாடல் வசதிகள் ஆகியவை மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இது அவர்களின் வாழ்க்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மலையக மக்கள் பெரும் பாரட்சங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 

வறுமையின் பிடிக்கு சிக்கப்படும் அவர்கள், எதுவித தொழில் பாதுகாப்பும் அற்ற தலைநகர் மற்றும் நகர் புறங்களை நோக்கி வேலைக்கு வருகின்றனர். இதனால், பன்மைத்துவ கலாசாராத்துக்கும், நகர்புறச் சூழலுக்கும் பழக்கப்படாத அவர்கள் மிகக் கொடூரமான கையறு நிலைக்குத் தள்ளப்படுவதுடன், 18 வயதுக்குட்பட்ட தமது பராயமடையாத பிள்ளைகளை  வீட்டு வேலைக்கு, கடைகளில் தொழில்  புரிவதற்கு , கார்களை கழுவும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். 

இதனால் அவர்கள் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடுகின்றது.

குறிப்பாக வறுமைக் கோட்டில் வாழும் மலையக பிள்ளைகளை குறிவைத்தே இத்தகைய தொழில்களில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை சுரண்டி எடுப்பதுடன், அவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகங்களுக்கும், மன ரீதியான இம்சைகளுக்கும் ஆளாக்குகின்றனர். ஆகவே, 18 வயதுக்கு குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதை  தடுப்பதற்கு அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்  என்றார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் எந்த வித அரசியல் இலாபங்களையும் கருதாது குற்றவாளிகளை சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37