“ நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்று பரவலை தடுக்க முடியுமென்றால் நிச்சயம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல வேண்டியேற்படும்”

Published By: Digital Desk 4

31 Jul, 2021 | 06:37 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணப்பட்டதைப் போன்று கொவிட் பரவலில் கணிசமானளவு அதிரிப்பை இவ்வாரத்தில் அவதானிக்க முடிகிறது.

புதனன்று 1900 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் வியாழக்கிழமை 2370 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை இல்லை - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  | Virakesari.lk

தற்போது பல பிரதேசங்களிலும் டெல்டா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் , கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் டெல்டா தாக்கம் செலுத்தக் கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது மீண்டும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்றால் , நிச்சயம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல வேண்டியேற்படும்.

ஆனால் வைரஸ் பரவலுக்கு அஞ்சி பின்வாங்காமல் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் இந்த நிலைமையிலிருந்து மீள முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தற்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கான காரணம் டெல்டா வைரஸ் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

அவ்வாறு கூறுவது கடினமாகும். காரணம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சகலருக்கும் டெல்டா தொற்று காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்கான மரபணுவின் ஒழுங்கமைப்பை அறியும் பரிசோதனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது.

எவ்வாறிருப்பினும் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோருக்கு தீவிரமான சிகிச்சை அறிகுறிகள் காணப்படுவதோடு , ஒட்சிசன் தேவையுடையோராகவும் உள்ளனர். எனவே கொவிட் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33