உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியில் பூஜா குஷ்வாஹா என்ற 18 வயது நிரம்பிய இந்து சிறுமி  குரான் கற்பித்து வருகின்றமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கல்லூரி மாணவியாகிய பூஜா மாலை நேரங்களில் குரான் வகுப்பு எடுத்து வருகிறார். 

அவரிடம் அப்பகுதியில் 35 இஸ்லாமிய குழந்தைகள் குரான் கற்று வருகின்றனர். 

பூஜாவால் குரானில் இவ்வளவு பாண்டித்யம் பெற முடிந்தது எவ்வாறு என்று வினவியபோது,பல ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர் ஒருவர்,இந்து பெண்ணை திருமணம் செய்தார். 

அவர்களுக்கு பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண் இப்பகுதியில் குழந்தைகளுக்கு குரான் வகுப்பு எடுத்தார்.

அந்த வகுப்பில் நான் ஆர்வமுடன் கற்றுக்கொண்டேன். நான் இந்துவாக இருந்தாலும் கூட எனக்கு ஆன்மீக புத்தகங்கள் படிக்க பிடிக்கும். அதனால் குரானை ஆர்வமுடன் கற்றுக்கொண்டேன். 

சில தவிர்க்க முடியாத காரணங்களால் சங்கீதா பேகம் வகுப்பு எடுப்பதை விட்டுவிட்டார். அதை நான் தற்போது தொடர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.