(இராஜதுரை ஹஷான்)
உலகம் எதிர்கொண்டுள்ள வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுடன் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர்கள், விமான சேவை நிறுவனத்தினருடன் இன்று நிதியமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுற்றுலாத்துறை சேவையினை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை பெற்றுள்ளது.
சுற்றுலாத்துறை சேவையை கட்டியெழுப்ப பிற நாடுகள் நிவாரண பொதி முறைமையை சுற்றுலாத்துறை சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறான செயற்திட்டங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும் சேவை துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM