எம்.மனோசித்ரா

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

அக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்பவே குறித்த சட்ட மூலம் தொடர்பில் சுதந்திர கட்சி அதன் தீர்மானங்களை எடுக்கும் என்று கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

காலியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கட்சி கூட்டத்தின் பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே  முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்திலும் மத்திய குழு கூட்டத்திலும் கலந்துரையாடியுள்ளதோடு குழுவொன்றையும் நியமித்துள்ளோம். அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமையவே நாம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் குறித்து தீர்மானிப்போம் என்றார்.