கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள், மருத்துவர்களின் வழிகாட்டலுக்கேற்ப மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

பரிசோதனை செய்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் நீரிழிவு, பக்கவாதம், குருதிநாள அடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு பெரும்பான்மையான மக்களுக்கு நீரிழிவு, பக்கவாதம், குருதிநாள அடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடலியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

வைத்தியசாலையிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களல் பலரும் பக்கவிளைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவர்கள், கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்கள், 28 நாட்களுக்கு பிறகு மீண்டும் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

இத்தகைய மறுபரிசோதனையின் மூலம் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காப்பாற்ற இயலும். குறிப்பாக இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை, இதயத்துடிப்பு பரிசோதனை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனை, ஜீரண மண்டல பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகளைச் செய்துக் கொண்டு, கொரோனாவிற்கு பின்னரான ஆரோக்கியம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனை புறகணித்தால்  கொரோனாவிற்கு பின்னரான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். 

முதல் அலை மற்றும் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளாததால், அவர்களில் பலருக்கு சர்க்கரை நோய், இரத்தநாள அடைப்பு, இதயப்பாதிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனாத் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள், 28 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு, பக்கவிளைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளுங்கள் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

டொக்டர் ராஜன்

தொகுப்பு அனுஷா