ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கூடும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை கால்பந்து சம்மேளனத்தை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 04 ஆம் திகதி கூடும் அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு (கோபா) நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆகியன அழைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு உள்ளிட்ட 13 குழுக்கள் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் கூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்கள் தெரிவித்தார்.