கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து மேலும் 1,716 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 275,212 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 24,666 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 2,370 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 303,682 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.