நான்காயிரத்திற்கும் அதிகமான டெல்டா தொற்றாளர்கள் நாட்டில் இருக்கலாம் - பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர்

30 Jul, 2021 | 04:56 PM
image

(ஆர்.யசி)

முதல் இரண்டு கொவிட் வைரஸ் அலைகளை விடவும் தற்போது மோசமான நிலையொன்று நாட்டில் காணப்படுவதாகவும், நாடு அச்சுறுத்தல் நிலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 

முறையாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்தால் நாட்டில் தற்போது வரையில் நான்காயிரத்திற்கும் அதிகமான டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும், அச்சுறுத்தல் நிலையொன்றில் நாடு உள்ளதாகவும் சுகாதார, மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து வருகின்ற நிலையில் உண்மை நிலையை குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவலில் உச்சகட்ட வைரஸாக அடையாளம் காணப்படும் டெல்டா வைரஸ் பரவல் வேகமாக பரவிக்கொண்டுள்ளது. 

நாடு தற்போது பாதுகாப்பான நிலையில் இல்லை என்பதையே எம்மால் கூற முடியும். அதே நேரம் தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் மாத்திரம் நாம் அச்சுறுத்தல் நிலையில் இருந்து விடுபட்டுவிட்டோம் என கருத வேண்டாம். 

இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது விட்டால் வைரஸ் தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேரிடும்.

மேலும், சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதேபோல் ஆசிரியர் சங்கங்களும் நீண்ட நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டங்களில் நியாயம் இருக்கலாம் ஆனால் தற்போதுள்ள நிலையில் நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமான விடயமல்ல. 

அனேகமாக அடுத்த 14 நாட்களில் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டுசெல்லப்படும் நிலைமை உருவாகும். அதனை கருத்தில் கொண்டு சகலரும் செயற்பட வேண்டும்.

தற்போதுள்ள தரவுகளை பார்த்தால் நாளாந்தம் வைரஸ் தொற்றின் வீதம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. முறையாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதில்லை, முறையாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டால் தற்போது வரையில் நாட்டில் நான்காயிரத்திற்கும் அதிகமான டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்பதை உறுதியாக எம்மால் கூற முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04