இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி,

புதிய உற்சாகத்துடனும் புதிய நம்பிக்கையுடனும் ஒன்றிணைந்து விளையாடி - கிரிக்கெட் உலகில் இலங்கையின் நாமத்தை பாதுகாக்க - மிகுந்த அர்ப்பணிப்புடன் போராடி - நேற்றைய தினம், இந்திய அணியுடனான போட்டியில் வெற்றிபெற்ற நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.