ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தை விரிவுபடுத்தும் ஜப்பான்

Published By: Vishnu

30 Jul, 2021 | 02:24 PM
image

தலைநகர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வேளையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதானால், டோக்கியோவில் அமுலில் உள்ள அவசர நிலையை அண்டைய பகுதிகளுக்கும் மேற்கு நகரமான ஒசாகாவிற்கும் ஜப்பான் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தவுள்ளது.

சைட்டாமா, கனகாவா, சிபா மற்றும் ஒசாகா ஆகிய பகுதிகளை திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 31 வரை அவசரகாலச் சட்டத்தின் கீழ் வைக்கும் திட்டத்திற்கு ஒரு அரசு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டோக்கியோ மற்றும் தெற்கு தீவான ஒகினாவாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டமும் நீட்டிக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்புகளை ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். 

ஹொக்கைடோ, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா உட்பட மற்ற ஐந்து பகுதிகள் குறைவான அவசரக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்படும்.

டோக்கியோவில் வியாழக்கிழமை உட்பட கடந்த மூன்று நாட்களில் 3,865 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை...

2025-02-19 10:17:58
news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆசிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-19 06:59:21
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53