பாகிஸ்தானின் பிராந்திய இராஜதந்திர குழப்பம்

Published By: Digital Desk 1

30 Jul, 2021 | 12:53 PM
image

அண்மைய மாதங்களில் பாகிஸ்தானிய தலைவர்கள் 'வெளியுறவுக் கொள்கை மாற்றத்தை' புவிசார் அரசியலில் இருந்து புவி சார் பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து ஏற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

எளிமையாகச் சொல்வதானால், இஸ்லாமாபாத் அதன் தென் மற்றும் மத்திய ஆசிய அண்டை நாடுகளுடன் அதிக வர்த்தகத்தையும் முதலீட்டையும் வளர்ப்பதற்காக அந்நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. 

இந்த விருப்பம் பாகிஸ்தானுக்கு ஆரம்பத்தில் சில வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தாலும் அண்மைய நாட்களில் சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையிலான முன்னேற்றகரமான இருதரப்பு உறவுகள் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இஸ்லாமபாத்தானது, தனது உள்நாட்டில் சிக்கலான நிலைமைகள் உள்ளன என்ற உலகளாவிய பிப்பத்தை மாற்றியமைப்பதற்கு அதிகளவில் விரும்புகின்றது. இதற்காக, இரண்டு நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. 

முதலாவது, அதிக சந்தைகளையும் வர்த்தக பங்காளிகளையும் உருவாக்குதலாகும். இரண்டாவது, பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதை அடிப்படையாக வைத்து பிராந்திய பதற்றங்களிலிருந்து நாட்டை திசைதிருப்புவதாகும்.

இந்த நோக்கங்களுக்காக இஸ்லாமபாத் சில நகர்வுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, 2019இல் இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு பதற்றமான நிலைமை இருந்தது. எனினும் கடந்த ஆண்டு எல்லையில் யுத்தநிறுத்தத்தினை கடைப்பிடிப்பதாக அறிவித்து புதுடெல்லியுடனான  பதட்டங்களை குறைத்தது. 

அதற்கு அடுத்தபடியாக, மிக மோசமான மோதல்களால் 1971ஆம் ஆண்டில் பங்களாதேஷ் சுதந்திரம் அடைவதற்கு வழிவகுத்தது. இதனை உணர்ந்து கொண்ட பாகிஸ்தான் பின்நாட்களில் டாக்காவுடனான உறவுகளில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தியது. 

இதன்பலனாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த கோடைகாலப் பகுதியில் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இருதரப்பு பேச்சுக்களை மேற்கொண்டார். அதன் பின்னர் தொடச்சியாக கடிதப்பரிமாற்றங்கள் உட்பட இருதரப்பு உறவுகளை சுமூகமாக கையாண்டு வருகின்றார். 

அதேபோன்று தான், கொழும்புடனான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக கான் இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார், அத்துடன் இஸ்லாமாபாத் கொழும்புடன் கொண்டுள்ள வலுவான பாதுகாப்பு உறவுகளையும் மீளப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. 

அண்மைய காலங்களில் உட்கட்டமைப்பு முதலீடுகள் என்பவற்றுடன் கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றால் தெற்காசியப் பிராந்தியத்தில் சீனா ஆழமாக தடம்பதித்துள்ளது. குறிப்பாக, பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளில் இந்தத் தடம் மிகமிக ஆழமாக உள்ளமை வெளிப்படையானது. 

அதனைவிடவும், பீஜிங் இந்த நாடுகளுடன் வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றது. இந்த நிலைமையானது பிராந்தியத்தில் தனக்கு எதிர்காலத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்று கருதும் பாகிஸ்தான் தற்போது தனக்கான இராஜதந்திர நகர்வுகளைக் கையில் எடுத்துள்ளது. 

இதற்கிடையில், பாகிஸ்தான், மத்திய ஆசியாவிலும் தனது ஈடுபாட்டை அதிகமாக வெளிப்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ளது. மத்திய ஆசியாவில் காணப்படும் வளங்கள், மற்றும் அதன் அமைவிடம் என்பன இராஜதந்திர மூலோபயத்திற்கு மிகவும் முக்கியமானது என்று இஸ்லாபாத் கருதுகின்றது. 

இதன்காரணமாக, முதற்கட்டமாக கடந்த பெப்ரவரியில், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுடன் 'ஆப்கானிஸ்தான் புகையிரப் பாதை ஒப்பந்தம்' ஒன்றை இஸ்லாமாபாத் கைச்சாத்திட்டது. அதேபோன்று, கடந்த வாரம், ஆப்கானிஸ்தான், விடயத்தில் அமெரிக்காவுடன், உடன்பாடொன்றை பாகிஸ்தான் எட்டியது, அதாவது. ஸ்திரத்தன்மையை உறுதி செய்தலாகும். 

அதேநேரம், மத்திய ஆசியாவை மையப்படுத்தி இஸ்லாமாபாத் தனது நட்பு நாடுகளான சீனா மற்றும் அதன் பெருகிய நெருங்கிய நட்புடைய ரஷ்யா ஆகியவற்றுடனம் மிக நெருக்கமான உறவுகளை பேணி வருதலாகும். 

இதனைவிடவும் பாகிஸ்தான் தனது பிராந்திய கூட்டும் சக்தியையும் வலுவாகவே வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரியில், பாகிஸ்தானின்  கடற்படையானது அரேபிய கடலில் ஐந்து நாட்கள் பயிற்சியை நடத்தியது. இதில் 45நாடுகளை உள்ளடக்கியிருந்தது. இந்தப் பயிற்சி பாதுகாப்பு சார்ந்த கூட்டுறவை வெளிப்படுத்தி நிற்பதாக உள்ளது. 

இவ்வாறான நிலையில் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார மையமாக உருவெடுக்க முனைவது அல்லது அவ்வாறான மையமொன்றை தான் சார்ந்து அமைக்க முயல்வதை பல்வேறு உதாரணங்களுடன் பொரின்பொலிஸி இணையத்திற்காக ஆய்வுகளை எழுதும் ஆரிஃப் ரபீக் மற்றும் தெற்காசிய குரல்களுக்கான அமைப்பின் ஹம்னா தாரிக் ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், பாகிஸ்தானை மையப்படுத்தி வெளிப்படுத்தப்பட்ட அந்நாட்டின் உள்நாட்டு பொருளாதார விடயத்தில் காணப்படும் தடைகள் கணிசமானவை. ஆனாலும் இராஜதந்திர விடயத்திலும் அவ்விதமான தடைகள் உள்ளன என்பதை பாகிஸ்தானால் நிராரிக்க முடியாது. 

இந்தியாவுக்கும் பிராந்திய ரீதியில் பதற்றங்கள் உள்ளன. அவை அதிகளவில் பாதுகாப்புச் சார்ந்தவையாகவே உள்ளன. பொருhளதார ரீதியாக பெருமளவிற்கு பதற்றங்கள் காணப்படாது விட்டாலும் முழுமையாக இல்லையென்று கூறவும் முடியாது. எவ்வாறாயினும் இந்தியா பிராந்தியத்தில் தொடர்ச்சியாக ஒரு 'ஹெவி வெயிட்' ஆவே திகழ்கின்றது. 

மேலும் பரந்துபட்டதொரு பிராந்திய ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்காகவும், அதற்கான தலைமையை மையப்படுத்துவதற்காகவுமே பிம்ஸ்டெக் போன்ற கூட்டு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், எல்லை யுத்த நிறுத்தம் செய்யப்பட்டதன் பின்னலும் இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் நெருக்கடியில் உள்ளன. 

கடந்த ஜுன் மாதம் லாகூரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறை தான் காரணம் என்று  இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியதுடன், எந்தவொரு 'பின்கவுதப்' பேச்சுவார்த்தைகளையும் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. 

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் இரண்டு வௌ;வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. குறிப்பாக, கடந்த வாரம் வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் ஒன்பது சீன நாட்டினர் பலியானார்கள். இது பாகிஸ்தானில் சீனர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டதொரு மோசமான தாக்குதலாகும்.

இந்த தாக்குதலின் பின்னர் பீஜிங் மிகக் கடுமையான வார்த்தகள் மூலமாக தனது அதிருப்திகளை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தாலும், பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் சீனாவின் கருத்துக்கள் எரிச்சலூட்டுகின்றன.

பாகிஸ்தானில் நடைபெற்ற சீன இலக்குகள் மீதான தாக்குதல்களின் அடிப்படையில் அங்கு இரண்டு முக்கிய வன்முறை பிரிவினைவாத குழுக்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. 

மறுபக்கத்தில், இஸ்லாபாத்திற்கும் காபூலுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கனவே நிலையற்று இருந்தாலும் கூட அண்மைய நாட்களில் அது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், பாகிஸ்தான் தலிபான்களுக்கு பல்வேறு வகையான ஆதரவினை பாகிஸ்தான் வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

கடந்த 16ஆம் திகதி அன்று, பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதரின் மகள் இஸ்லாமாபாத்தில் தாக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த காபூல் அதன் தூதரையும் பிறஇராஜதந்திரிகளையும் மீள அழைத்துக்கொண்டுள்ளது. 

இதனால், காபூலுடனான பாகிஸ்தானின் உறவுகள் மிகவும் மோசமாகவே உள்ளன. இதனால் பாகிஸ்தான் தனக்கு ஏற்படும் பாதிப்புக்களை கருத்தில் கொண்டுள்ளது. அதனால் தான்  புவி சார் பொருளாதார மையத்தின் முக்கிய அங்கமாக பாகிஸ்தான் இணைப்பைக் கருதுகிறது. 

பாக்கிஸ்தானில் மோசமான பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அதன் தலைமை உள்கட்டமைப்பு கூட்டாளர்கள் அனைவருமே கவலைகளைக் கொண்டிருக்கின்றார்கள். காபூலுடனான இஸ்லாமாபாத்தின் மோசமான உறவுகள் ஆப்கானிய சமாதான முன்னெடுப்புகளுக்கு தடைகளாகவே உள்ளன.

ஏனெனில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பாகிஸ்தான் குறித்து அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தலிபான்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் சந்கேங்களையும் கொண்டிருக்கின்றது.

 இந்த நிலைமையானது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட அவற்றின் பிராந்திய நாடுகளில் வெகுவாகத் தாக்கம் செலுத்துகின்றன.  புவி சார் பொருளாதார மையமாக மாறுவதற்குத் தேவையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையினை பாகிஸ்தான் உறுதி செய்து கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றது. 

இது, கடுமையான போட்டிகள், இராஜதந்திர பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வழிசமைத்து விடுவதாக உள்ளமை அபாயகரமான விடயமாகும். 

மைக்கேல் குகல்மேன் (தெற்காசிய வெளிவிவகார கொள்கைகள் பற்றி நிபுணத்துவம் வாய்ந்த எழுத்தாளர்)

தமிழில்: ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49