பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் வெட்டுக்குழுவின் தாக்குதலுக்கு இலக்கான குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திக்கம் அல்வாய் பகுதியை சேர்ந்த வரோதயம் மேரி ஜோசப் என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார். 

குறித்த பெண்ணின் வீட்டினுள் நேற்று வியாழக்கிழமை மாலை புகுந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி பெண் மீதும் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.