(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சியில் அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்ட தொழிற்சங்கத்தினர் தற்போது  பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுவது அவர்களின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

Tuition classes in WP to face ban?

தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற  அரசாங்கம் தயாராகவுள்ளது. ஆனால் அதற்கான தருணம் தற்போது கிடையாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர், தாதியர் தொழிற்சங்கததினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாடு எதிர்க் கொண்டுள்ள நெருக்கடி நிலையினை இவர்கள் நன்கு அறிவார்கள்.

தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம். சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாராகவுள்ளோம்.

இருப்பினும் அதற்கான தருணம் தற்போது கிடையாது.என்பதை பிரதமர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே தொழிற்சங்கத்தினர் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.