திருகோணமலை பிரதேசத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பண்டாரகம வர்த்தகர் தொடர்பில் 23 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 5  பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வர்த்தகர்  கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை ஏல விற்பனைக்கு சென்றுள்ளவேளை காணமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.