(செய்திப்பிரிவு)


கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமது பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து  தமது வீட்டில் 14 நாட்களுக்கு சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், கைத்தொழில் அமைச்சில் உள்ள காரியாலயம்  எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படும் என்றும், கைத்தொழில் அமைச்சின் பணிகள் வழமை போன்று இடம் பெறும் எனவும்  அமைச்சர் விமல் வீரவன்ச தனது முகப்பு புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.