கல்முனைப் பிராந்தியத்தில் 79 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று..!

Published By: J.G.Stephan

29 Jul, 2021 | 04:34 PM
image

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

கூடுதலாக அக்கரைப்பற்றில் 15 பேரும், பொத்துவிலில் 13 பேரும், சம்மாந்துறையில் 11 பேரும் ஏனைய பிரதேசங்களில் 10க்கும் குறைந்த கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்துக்கான இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள்  இன்று (29.07.2021) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கென 1 இலட்சத்து 50 ஆயிரம் சினோர்ஃபாம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன எனவும்,  அவற்றை சகல 13 சுகாதாரப் பிரிவுகளிலும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து  தடுப்பூசிகளை ஏற்றி கொள்ளுங்கள் என்று அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33