மண்டலமும் பாதையும் முன்முயற்சியும் பகிஸ்தானின் பேச்சுவார்த்தைகளும்..!

By J.G.Stephan

30 Jul, 2021 | 03:03 PM
image

-ஆர்.ராம்-

'ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதானது பலூச் உரையாடலை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பிரதமர் இம்ரானை தூண்டியுள்ளது'


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவின் கனவுத்திட்டமான மண்டலமும் பாதையும் முன்முயற்சியை எதிர்க்கும் தரப்பினருடன் பேச்சுக்களை மீண்டும் முன்னெடுப்பதற்குரிய தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் பலூச் கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக பிரதமர் இம்ரான் கான் கடந்த வாரம் கூறினார்.

அத்துடன் அக்கிளர்ச்சியாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளால் அவர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் அதிருப்திகள் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பட்டார்.

இதனைவிடவும், இந்தியா அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் பயங்கரவாதத்தினை பரப்புவதற்கு முயற்சிக்கலாம் என்றும் பிரதமர் இம்ரான் கூறியிருந்தார்.

இவ்விதமான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட்ட பிரதமர் இம்ரான் கான்,

அதன்பின்னர் பலூச் கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியைக் கோரினார்.

அதற்கு அமைச்சரவை முழுமையான அனுமதிய வழங்கியுள்ளதோடு, இந்தியாவுடன் தொடர்புடைய எந்தவொரு குழுக்களையும் பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பேச்சுக்களை முன்னெடுக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இதன் பின்னர், பிரதமர் இம்ரான் கான், பலூச் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகவும், அவர்கள் அதிகளவில் செயற்படும் பகுதியான அதாவது அவர்களின் முக்கிய தளமான பலூசிஸ்தானில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் சிறப்பு உதவியாளரான ஷாஜெய்ன் புக்தியை என்பவரை நியமித்துள்ளார்.

ஷாஜெய்ன் புக்தி ஆளுநராக இருந்து கிளிர்ச்சியாளராக மாறிய நவாப் அக்பர் புத்தியின் பேரன் ஆவார். நவாப் அக்பர் புக்தி 2006 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதோடு இவருடைய கொலைக்குப் பின்னர் தான் தற்போதைய பலூஸ்தானில் கிளிர்ச்சியாளர்கள் தீவிர நிலைப்படுகளை எடுத்தனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பலூச் கிளர்ச்சியாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் எப்படி, எப்போது, எங்கு நடக்கும் என்பது குறித்த எந்த விபரங்களும் தற்போது வரையில் இல்லாத நிலையில் பாகிஸ்தான்  அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தலைவர்களுடன் ஒரே மேசையில் அமர்வதற்கான முயற்சிகளை நிச்சயம் முன்னெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், ஜமத்தியஸ அரசாங்கம், பரம்தாக் புக்தி போன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான விருப்பினை வெளியிட்டிருக்கின்றார்கள்.

ஆகவே பாகிஸ்தான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பின் பிரகாரம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று பல தசாப்தங்களாக பலூசிஸ்தானிலிருந்து செயற்படும் அரசியல் விமர்சகரான ஷாஜாதா சுல்பிகர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காலத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல்கள் கிளர்ச்சியாளர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்காக வழங்கப்படும் அழுத்தமாகும் என்பதை பாகிஸ்தான் நன்கு உணர்ந்துள்ளது.

கடந்த 2020 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இருபது பயங்கரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தாக்குதல்களின் எண்ணிக்கை 80ஆக காணப்படுகின்றது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. அவ்வாறு அமெரிக்கப் படைகள் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூற்றுக்கு அமைவாக, எதிர்வரும் செப்டம்பா 11 ஆம் திகதிக்குள் முழுமையாக திரும்ப பெறப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு பகுதி பகுதியாக அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் பட்சத்தில் அங்கு ஸ்திரமற்ற நிலைமையொன்றும் சமகாலத்தில் தோற்றம் பெற்று வருகின்றது.

இந்த நிலைமையால் ஏற்படும் நெருக்கடிகளை கையாள்வதற்காகவே, பலுசிஸ்தானில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை இம்ரான் முன்னெடுத்துள்ளார்.


சிங்கப்பூரில் உள்ள எஸ்.ராஜரத்தினம் ஸ்கூல் ஒஃப் இன்டர்நேஷனலின் ஜேம்ஸ் எம்.டோர்சி என்பவர், பலூச் கிளர்ச்சியாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன்மூலமாக பாதுகாப்பு வேலிகள் அமைப்பது இஸ்லாமாபாத்திற்கு பயனளிக்கும் என்பதால் இம்ரான் கானின் நகர்வுகள் சிறந்தவொரு நடவடிக்கையாகவே உள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இவற்றுக்கெல்லாம் அப்பால்சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின் ஒர் அங்கமான 50 பில்லியன் டொலர்கள் பெறுமதியுடைய திட்டமான 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை' உயிருடன் வைத்திருப்பதற்கான ஒரு உபாயமாகவும் பிரதமர் இம்ரான் கானின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றது.

பலூச் மற்றும் சிந்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் தலிபான்கள் ஆகிய தாரப்பினரால் பாகிஸ்தானில் காணப்படுகின்ற அல்லது அடுத்து வரவுள்ள சீன முதலீடுகள் பாதிக்கப்படும் என்பதை இஸ்லாமாபாத் நன்றாகவே அறிந்திருக்கிறது என்று வில்சன் மையத்தில் ஆசியா திட்டத்தின் துணை இயக்குநர் மைக்கல் குகல்மேன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானில் இருந்து திரும்பப் பெறுவது ஆப்கானில் உறுதியற்ற தன்மையை அதிகரிக்கும். இதனால், பலூச் கிளர்ச்சியாளர்கள் தம்மை  மீண்டும் ஒருங்கிணைத்து காலடி எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இதேவேளை, பலூச் கிளர்ச்சியாளர்கள் சீனாவின் நலன்களுக்கு எதிரான வன்முறையாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆகவே அவர்கள் பாகிஸ்தானில் அடுத்துவரும் காலத்தில் பாதுகாப்பு அச்சங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. ஆகவே தான், பிரதமர் இம்ரான் கான் அத்தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கத் தயாராகி உள்ளார்.

இந்த முயற்சியினால் பாகிஸ்தானின் உள்நாட்டு நிலைமைகளில் ஏற்படவுள்ள பாதுகாப்பு அபாயங்கள் வெகுவாக குறையும். அத்துடன், சீனாவின் எந்தவொரு ஒப்பந்தமும், அடுத்துவரும் காலத்திற்கான திட்டங்களுகும் ஆபத்துக்களிலிருந்து நீக்குகின்றன.

இவ்வாறிருக்கையில், பலூசிஸ்தான் அரசியல் விமர்சகரான சுல்பிகர், பலூச் கிளர்ச்சியாளர்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதை சீனாவும் விரும்புகிறது. சீனாவின் நிதியில் மறுசீரமைக்கப்படும் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தின் பயன்களை அனுபவிக்கவும், தனது திட்டங்களை தடையின்றி மேற்கொள்வதற்கும் இந்தப் பலூச் கிளர்ச்சியாளர்களுடனான பேச்சுக்கள் மிகவும் முக்கியமனவை என்று பீஜிங் நன்கு அறிந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, 'பலூச் கிளர்ச்சியாளர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவது பாகிஸ்தானக்கு மற்றொரு வெற்றியையும் அளிக்கவுள்ளது. அதாவது, பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா பொருள், மற்றும் பண உதவிகளை வழங்கியதாக இஸ்லமபாத் கருதுகின்றது.

ஆகவே கிளர்ச்சியாளர்களுடன் இணக்கப்பாட்டை எட்டுவதானது அவர்களின் இந்தியாவுடனான உறவுகளை முழுமையாக துண்டிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் பாகிஸ்தான் கருதுகின்றது. ஆகவே பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக நடைபெற்றால் அது புதுடெல்லிக்கு எதிராக இஸ்லாமாபாத் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவும் சித்தரிக்கப்படும்' என்றும் சுல்பிகர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைகளின் ஊடாக உண்மையான வெற்றியைப் பெறுவதற்கு பாகிஸ்தானுக்கு சாதக நிலைமைகள் காணப்படுகின்றன. எனினும், பலூச் கிளர்ச்சியாளர்கள் பொருளாதாரம், சமூக இழப்பினை மீட்டெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் அதிகளவான உயிர்களை விலையாக கொடுத்துள்ளனர்.

ஆகவே மேம்பட்ட பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலை உறுதி செய்யும் ஒப்பந்தமொன்றை அவர்கள் எதிர்பார்க்கலாம். அதில் அவர்கள் கிடுக்குப்பிடியுனும் இருக்கலாம். அதனை பாகிஸ்தான் வழங்கும் பட்சத்தில் பலூச் கிளர்ச்சியாளர்கள் ஏனைய விடயங்களை கைவிட்டு இஸ்லாமபாத்திற்கு இன்முகம் காண்பிக்கலாம். எனினும் அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள பேச்சவார்த்தைகளே இந்த எதிர்பார்ப்புக்களுக்கு எல்லாம் பதிலளிக்கவுள்ளன.

(இந்தக் கட்டுரையானது, சீன-பாகிஸ்தான் உறவுகள், சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் ஸ்கூல் ஒஃப் இன்டர்நேஷல் ஆய்வறிக்கை, நிக்கி ஏசியா இணையம் ஆகியவற்றின் தகவல்களை அடிப்படையில் வரையப்பட்டமை குறிப்பிடத்தக்கது)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட மாயாஜால உலகமிது !

2022-10-01 21:39:07
news-image

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் கடுமையான...

2022-10-01 12:53:46
news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02