(இராஜதுரை ஹஷான்)

வரையறுக்கப்பட்ட அளவிலான அரச , தனியார் பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும். 

இதன் போது சுகாதார பாதுகாப்பு  வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க  அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.