சினிமாவில்,  முக்கிய பிரபலமாகவும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவரே கலைஞர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியுடன் இன்று திருமணத்தில் இணைந்துக் கொண்டுள்ளார்.

மேலும், சென்னையில் நடைபெற்ற சினேகனின் திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்துள்ளார்.

இத்திருமண விழாவில்,  இரு வீட்டாரின் குடும்பத்தினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.