மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் நாளை புதன்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.