தென் சீனக் கடல் முழுவதும் சீனாவின் ‘சட்டவிரோத’ பிரசன்னங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளை உரிமைகோரல் செயற்பாடுகளில் சீனா அதிகமாக ஈடுபட்டு வருகின்றது.

  

குறிப்பாக மலேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ{க்கு ஆகிய நாடுகளை வற்புறுத்தும் வகையில் சீனா தனது நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலைமையில் தற்போது அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துடன்(ஆசியான்) தனது நெருக்கத்தை வெகுவாக அதிரித்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஆசியா டைம்ஸில் ரிச்சர்ட் ஜாவாட் ஹெய்டேரியன் என்பவர் எழுதியுள்ள பத்திரிகையொன்றில்,

“அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டணி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் ஆகிய இருவரும் ஆசியப் பிராந்திய நட்பு நாடுகளையும் அப்பிராந்தியத்தில் உள்ள பங்காளிகளையும் ஒருங்கிணைத்து அமெரிக்காவின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நகர்வுளை முன்னெடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  

அவரது கூற்றை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தற்போது ஆசியானுடனான தனது இராஜதந்திர ஈடுபாட்டை அதிகரித்து வரும் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.

  

ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடான தனது முதற் சந்திப்பில், பரந்த இந்தோ-பசிபிக் பாதுகாப்பு கட்டமைப்பை வடிவமைத்தல், பிராந்திய அமைப்பின் ‘மையத்தன்மைக்கு’ பகிரப்பட்ட நலன்கள் உள்ளமையை வொஷிங்டன் ஏற்றுக்கொண்டமை, அதற்கான உறுதிப்பாடுகளை கொண்டிருக்கின்றமை பற்றிய விடயங்களை இராஜாங்கச் செயலாளர் அன்டணி பிளிங்கன் வலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கிறார்.

  

அத்துடன் மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியிருந்த அன்டணி பிளிங்கன் தென்சீனக் கடலில் சீனாவின் சட்டவிரோதமான கடல்சார் செயற்பாடுகளையும் முழுமையாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறான நிலையில், சீனாவிற்கும், தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு உரிமைகோரும் சிறு நாடுகளுக்கும் இடையில் நீடித்துக்கொண்டிருக்கும் முரண்பாடான நிலைப்பாடுகளுக்கு மத்தியில், பீஜிங்கின் விரிவாக்கச் செயற்பாடுகளுக்கு எதிராக இராஜாங்கச் செயலாளர் பகிரங்கமாகவே கடுமையான பதிலளிப்பை வழங்கியுள்ளார் என்று ஹெய்டேரியன் தனது பத்தியில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

  

அமெரிக்காவின் ஒப்பந்தங்கள் அடிப்படையில் அதன் நட்பு நாடாக இருப்பது பிலிப்பைன்ஸ். இதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் மே மாதத்தின் நடுப்பகுதி முதல் ஜூன் நடுப்பகுதி வரை மட்டும், 238 சீனக் கப்பல்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

  

இவ்வாறு சீனக் கப்பல்களால் முற்றுகையிடப்பட்ட பிராந்திய, மாநிலங்களுக்கு அவற்றின் எதிர்காலப் பாதுகாப்பு பற்றி உறுதியளிக்கும் செயற்பாடுகள் பற்றி ஆராயும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் மற்றும் சிங்கப்பூரின் ஆகிய நாடுகளின் முக்கியமான மையங்களுக்குச்; செல்லவுள்ளார். இதுவொரு இராஜதந்திர முக்கியச் செயற்பாடாக இருக்கும் என்றும் அவரது உரையும் காத்திரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் பங்கேற்பதன் மூலம் பல முக்கியமான இருதரப்புச்சந்திப்புக்கள் நடைபெறவுள்ளன. அதற்கும் அப்பால் வொஷிங்டனின் பிராந்திய இராஜதந்திரம் குறிப்பிட்ட இலக்கினை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ‘தடுப்பூசி இராஜதந்திரத்தை’ தகர்க்கும் வகையில் அமெரிக்கா மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை அண்மைய நாட்களில் ஆசியன் அமைப்பு நாடுகளுக்கு அனுப்பி அளித்து வருவதோடு பல உறுதிகளையும் வழங்கி வருகின்றனது.

  

இதன்மூலம், அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான நிருவாகம், ஆசியான் தனது ‘தடுப்பூசி இராஜதந்திரத்தை" இரட்டிப்பாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி உலகளாவிய கோவாக்ஸ் திட்டத்திற்கு பில்லியன் கணக்கான டொலர்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளது. அத்துடன், ஆசியான் அமைப்பு நாடுகளுக்கு மில்லியன் கணக்கான கொரோனா தடுப்பூசிகளையும் நன்கொடையாக அளித்து வருகின்றது.

  

குறிப்பாக, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை முதற்கட்டமாக எதிர்பார்க்கின்றன, அதேநேரத்தில் வியட்நாம், 2 மில்லியன் தடுப்பூசிகளையும் பிலிப்பைன்ஸ், 3 மில்லியன் தடுப்பூசிகளையும், இந்தோனேசியா 4 மில்லியன்  தடுப்பூசிகளையும் முதற்கட்டமாக எதிர்பார்க்கின்றன. இதனை வழங்குவதற்கு அமெரிக்கா சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

மேலும், சீனாவின் இரண்டு கடுமையான கடல் போட்டியாளர்களான வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ{க்கு செல்லவுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் செல்வதன் மூலம் ஆசியான் பிராந்தியத்தில் தனது கையை அமெரிக்கா ஒங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் ஒப் இந்தியா

தமிழில்: ஆர்.ராம்