“தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே பஸ்களில் பயணம் செய்ய முடியுமென அறிவிக்கவில்லை”

Published By: Gayathri

29 Jul, 2021 | 03:12 PM
image

“தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே பஸ்களில் பயணம் செய்ய முடியுமென அறிவிக்கவில்லை”

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19  தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என போக்குவரத்து திணைக்களம் இதுவரையில் அறிவிக்கவில்லை. பொது மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். 

மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்க  வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் குறித்த வழிகாட்டல் சுகாதார தரப்பினரால் நாளை வெளியிடப்படும் என போக்குவரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் எ.எச் பண்டுக தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை மீள ஆரம்பித்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்- 19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்  என்று சுகாதார தரப்பினரோ, போக்குவரத்து அமைச்சோ இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி செலுத்திக்  கொண்டால்  கொவிட் வைரஸ்  தொற்றாது என்று குறிப்பிடப்படவில்லை.

பொது மக்கள் தங்களின் சுயபாதுகாப்பை எந்நிலையிலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சுய பாதுகாப்பிற்கு சுகாதார தரப்பினர் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என்பதை  எதிர்பார்க்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

 நாளை மறுதினம் முதல் மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் தொடர்பிலான வழிகாட்டல் நாளை சுகாதார தரப்பினரால் வெளியிடப்படும்.

பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை காணமுடிகிறது. ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52