தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டெம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.