logo

துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி: மானிற்கு வைத்த குறி நண்பன் மீது பாய்ந்ததாக சந்தேகநபர் விளக்கம்..!

Published By: J.G.Stephan

29 Jul, 2021 | 12:23 PM
image

(எம்.மனோசித்ரா)
அம்பாறை - இங்கினியாகல பொலிஸ் பிரிவில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அம்பாறை - இங்கினியாகல நாமல்ஓயா  பிரதேசத்தில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நபர்கள் மூவர் நாமல்ஓயா - நாமல்தலாவ என்ற காட்டுப் பகுதிக்கு இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மூவரில் 27 வயதுடைய நரொருவர் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் இராணுவ சிப்பாய் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 36 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், தான் மான் ஒன்றினை துரத்திச் சென்று அதன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் , இதன் போதே தனது நண்பன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார். இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸாரால் விசாரணகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-06-08 13:47:34
news-image

பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு...

2023-06-08 13:34:47