மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களை பங்களாதேஷ் வெளியேற்றியுள்ளது. 

Flooding at Cox’s Bazar

குறித்த பகுதியில் நிலவும் பலத்த மழையினால் உண்டான வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில்  சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் புதன்கிழமை இரவு உறுதிபடுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குறைந்தது 6 ரோஹிங்கியர்கள் அடங்குவர். ஏனையவர்கள் உள்ளூர் கிராம வாசிகள் ஆவர். அவர்களின் வீடுகளும் அனர்த்தங்களினால் பெரிதும் பாதிப்பினை சந்தித்துள்ளது.

காக்ஸ் பஜார் மாவட்டத்தில், 850,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் 34 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 27 சென்றி மீற்றருக்கும் (10 அங்குல)  அதிகமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Refugees carry umbrellas as they search for survivors, Cox’s Bazar, Bangladesh

சிட்டகாங் பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், தலைநகர் டாக்கா, குல்னா மற்றும் பாரிஷால் போன்ற நகரங்களில் எதிர்வரும் நட்களில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் “ பங்களாதேஷின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.