டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை ஓட்டத்தை ஆரம்பிக்கிறார் நிமாலி..!

Published By: J.G.Stephan

29 Jul, 2021 | 11:34 AM
image

- டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் -
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் தடகளப் போட்டிகளில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் மகளிருக்கான 800 மீற்றர் ஒட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனை நிமாலி லியனாரச்சி பங்கேற்கவுள்ளார்.

ஜப்பானில் நாளை காலை 10:49 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது, இலங்கை நேரப்படி காலை 7.19 மணிக்கு நேடியாக பார்க்கூடியதாக இருக்கும்.

இதில் நாளை மறுதினம் மற்றொரு இலங்கை வீரரான யுபுன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச்சுற்றில் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்