தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்படுகிறது.
சித்தார்த் நடிப்பில் வெளியான 'அவள்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'நெற்றிக்கண்'.
இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக, பார்வைத்திறன் சவால் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் அஜ்மல், நடிகை இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இன்று மதியம் 12.15 மணியளவில் வெளியாகிறது.
இதனிடையே நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் தயாராகிவரும் 'அண்ணாத்த' என்ற படத்திலும், அறிமுக இயக்குனர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM