டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தனிமைப்படுத்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இல்லாததோடு மைதானத்தில வீரர்களை உற்சாகப்படுத்த பார்வையாளர்களும் இல்லாத காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளமையை பல நாட்டு வீரர்களம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில் வீரர் உலகளாவிய விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டின் நம்பிக்கையை சுமந்து கொண்டு தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிக்க போராடி வருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் குழு நிகழ்விலிருந்து சிமோன் பைல்ஸ் அதிர்ச்சி தரும் வகையில் வெளியேறிய பிறகு, உலகின் பாரத்தை தன் தோள்களில் சுமந்து கொண்டிருப்பதாக உணர்ந்ததாக கூறினார். கொரோனா தொற்றுநோயுடன் பிணைக்கப்பட்ட ஒரு வருட காலம், இழப்பு மற்றும் கட்டுப்பாடுகளால் அந்தச் சுமை அதிகரித்ததாகத் தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் எந்தவொரு வீரருக்கும் அவர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் டோக்கியோவில் விளைாட்டரங்கிற்கு வந்து அவர்களை உற்சாகப்படுத்த முடியாது, அத்தோடு வீரர்களின் போட்டிகள் தவிர்ந்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
டோக்கியோவுக்கு வருவதற்கு முன்பே, விளையாட்டு வீரர்கள் தொற்றுநோயுடன் தொடர்புடைய புதிய மற்றும் அறிமுகமில்லாத அழுத்தங்களை எதிர்கொண்டனர். அவர்கள் லொக்டவுன் காலத்தின்போது பயிற்சியளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுக்கு தகுதிபெற வேண்டியிருந்தது.
இதில் ஜிம்னானஸ்டிக் போடடியில் தங்கப்பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை ஏஞ்சலினா மெல்னிகோவா கூறுகையில், இது மிகவும் கடினமான பாதையாகும். தொற்றுநோய் காரணமாக விளையாட்டு ஒத்திவைக்கப்பட்டது என்று நாங்கள் அறிந்ததும், எங்கள் பயிற்சி தளம் மூடப்பட்டது. நாங்கள் ஒன்றரை வருடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM