20 வீரர்களுக்கு டோக்கியோ ‍ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

By Gayathri

29 Jul, 2021 | 03:04 PM
image

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரியாவைச் சேர்ந்த 10 பேர் உட்பட 20 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக ஊக்கமருந்து சோதனை நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி "ஏ பிரிவு" என்று அழைக்கப்படும் நாடுகளிலிருந்து ஒவ்வொரு வீரர் போட்டியில் பங்கேற்க தடை பெற்றுள்ளார். 

பெலாரஸ், பஹ்ரேன், எத்தியோப்பியா, கென்யா, மொராக்கோ, நைஜீரியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் வீரர்களேதடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் பெயர் விபங்கள் வெளியிடப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right