தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றியைப் பதிவு செய்து முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் டோரா. இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 

இதில் நயனின் தோற்றம் இருளில் இருந்தாலும். ஆகாயத்தில் தோன்றும் உருவமும், அதனை நயன் பார்க்கும் பார்வையும் என வித்தியாசமாக அமைந்திருப்பதால் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை முன்னணி தயாரிப்பாளரான நேமிசந்த் ஜபக் வெளியிடுகிறார்.

கார் ஒன்றை மையமாக வைத்து உருவாகியிருக்கும் டோரா படம், நயன்தாரவிற்கு மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பது மட்டும் உறுதி.

தகவல் : சென்னை அலுவலகம்