சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவோரை கைதுசெய்வதற்கான சிறப்பு நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகப் பிரிவினர் இது குறித்து சிறப்பு தரவுகளின் மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜூன் 17 - ஜூலை 28 வரை 17 ஆயிரத்து 629 சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த பதிவேற்றலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.