குருணாகல் பகுதியில் பொலிஸ்  அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர்  மீது சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

குறித்த பெண் மாத்திரமின்றி அவருடன் இருந்த மற்றுமொரு நபரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் நடுவீதியில் பெண்ணொருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டமைக்கு சமுக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிவந்தவாறு உள்ளன.