ஐந்து வங்கிக் கணக்குகளை இயக்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

அவரது வங்கிக் கணக்குகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலினூடாக சம்பாதித்ததாக நம்பப்படும் 6 பில்லியன் ரூபா பணமும் சி.ஐ.டி.யினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நிதி தொடர்பான விசாரணப் பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த பெண்னின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் என்று தெரியவந்துள்ளது என்றார்.