(ஆர்.யசி)
இலங்கை கடல் எல்லைக்குள் அண்மையில் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமையால் ஏற்பட்ட கடல் அனர்த்தம், அதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை பரிசீலித்து தமது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை அமைக்க வேண்டுமென்ற பிரேரணையொன்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இது எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சபாநாயகரினால் இது குறித்த அறிவிப்பு விடப்படும்.
கடந்த யூன் 22 ஆம் திகதி கொழும்பு கடற்பரப்பில் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியமை இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் சுற்றுச்சூழல் அனர்த்தம் எனவும், இவ் அனர்த்தம் கடல்சார் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை அழித்துள்ளதுடன், நாட்டிற்கு பாரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியிருப்பதாலும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதே இந்தக் குழுவின் நோக்கம் எனவும் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைத்துள்ள பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM