வட்டுவாகலில் காணி அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சிக்கு எதிராக, அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க முன்வரவேண்டும் என எம். கே சிவாஜிலிங்கம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம் பெற்றுள்ளது. குறிப்பாக வட்டுவாகலில் சுமார் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது.

மேலும், யாழ் மாவட்ட செயலகம் முன்பாக பழைய கச்சேரி கட்டிடங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் இடம் பெறுகின்றன. அத்தோடு, குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை ஆகிய இடங்களை புத்த விகாரை இருந்ததாக கூறி அதனை சூழ பல ஏக்கர் காணிகள்  அபகரிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, கொரோனாவை பயன்படுத்தி இராணுவ நில அளவையாளர்கள் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

எனவே, காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் ஆதரவாளர்கள் ஆனைவரும் ஒன்று திரண்டு நிறுத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.