உத்தேச ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக, பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தல் என்ற போர்வையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்வியை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றர்.

இந்நிலையில், ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிரான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம்,  கொழும்பிலுள்ள நாவல, திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.