மக்கள் வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதன் நிறுவன ரீதியான மற்றும் சர்வதேச வங்கிப்பிரிவினர்களுடன் இணைந்து பொல்பிதிகம, தலாகொலவௌ வ/ம/பொபீ/ ரெகாவுல ஆரம்பப் பாடசாலைக்கு புதியதோர் கட்டடத்தினை நிறுவி அதனை மாணவர்களுக்கு கையளித்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

சமூக பொறுப்புணர்வுத் திட்டமாக நிறுவன ரீதியாக மற்றும் சர்வதேச வங்கி பிரிவு ஊழியர்களின் முழுமையான பங்களிப்புடன் இக்கட்டடத்தினை நிறுவிட கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் தொகை செலவளிக்கப்பட்டது.

சரியான வகுப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் தென்னையோலைகளால் பின்னப்பட்ட சிறிய அறைகளிலேயே பல வகுப்புக்களை நடத்தி வந்தனர். 

எனவே இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு முழுமையான வசதிகளுடன் புதிய கட்டடத்தில் கல்வி கற்பதற்கான வசதி கிடைக்கப்பெறுகிறது. 

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதி பொதுமுகாமையாளர் (வியாபார கொடுக்கல் வாங்கல்) நிபுனிகா விஜயரட்ன, உதவி பொது முகாமையாளர் (விற்பனை நிதி) ஏ.எஸ்.எம்.வீ. குமாரசிறி, பிரதான முகாமையாளர் (சர்வதேச வங்கி நடவடிக்கைகள்)கே. சுபசிங்ஹ, பொல்பிதிகமை கிளையின் முகாமையாளர் - இந்து குறுப்பு, மஹவ வலய கல்விப் பணிப்பளாளர் - டீ. எம். அருண ஷாந்த, மஹவ உதவி கல்விப் பணிப்பாளர் - லக்ஷ்மண் ஹபுஆரச்சி, ரெகாவுல ஆரம்பப் பாடசாலையின் அதிபர் - எச்.எம். செனவிரத்ன பண்டா ஆகியோருடன் ஆசிரியர்கள் பலரும் வங்கி ஊழியர்களும் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.