சமூக மாற்றத்திற்கான மொபைல் விளையாட்டு இலங்கையில் அறிமுகம்

Published By: Gayathri

28 Jul, 2021 | 05:10 PM
image

சமூக மாற்றத்திற்கான முதலாவது மொபைல் விளையாட்டினை இலங்கையில் முதன்முதலாக மைனர்மட்டர்ஸ் (MinorMatters) அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

'ஐயோ அலிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள மொபைல் விளையாட்டின் அண்ட்ராய்ட் பதிப்பினை இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.  

சமூக மாற்றம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பினை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தையும் இவ்வகையான விளையாட்டுக்கள் கொண்டுள்ளன. 

இலங்கையில் இவ்வகை மொபைல் விளையாட்டுக்கள் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 

எனினும் உலகளாவிய ரீதியில் இவ்வகையான மொபைல் விளையாட்டுக்கள் மக்கள் மத்தியில் பிரசித்திபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘ஐயோ அலிஸ்’ டிஜிட்டல் உலகில் சகவாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதிலும் நல்ல நெறிமுறைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

இந்த மொபைல் விளையாட்டை விளையாடுபவரை இலங்கையின் பல பகுதிகளுக்கூடாகக் கொண்டுச் செல்லும் ஒரு அனுபவத்தை இவ்விளையாட்டு கொடுக்கும் என சட்டப்பிரிவின் முகாமையாளர் யாமினி ரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும், இவ்விளையாட்டானது மக்கள் மத்தியில் காணப்படும் சமூகப்பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் பங்களிப்பு, சமூக ஒத்திசைவு, நுண் சிந்தனைத் திறன், மற்றும் சகவாழ்வு பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் கூறினார்.

"அண்ணனான அன்டி தனது தங்கையைக் (அலிஸ்) காப்பாற்ற அவளை பின் தொடரும்போது  மேற்குறிப்பிட்ட  சமூகப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் பலத்தரப்பட்ட மக்களை அவன் முகம்கொடுக்கின்றான். 

அந்தப் பிரச்சினைகளுக்கு தலையிட்டு அம்மக்களுக்கு உதவி செய்ய அவன் முன்வருகின்றான். 

ஒரு குறிப்பிட்ட படிமுறையின் முடிவில் 'Learn More' பகுதியை அழுத்துவதன் மூலம் அப்படிமுறையில் குறித்த பிரச்சினை பற்றி மேலும் அறிந்து, இப்பிரச்சினைகளை நிஜத்தில் நாம் எவ்வாறு முறியடிக்கலாம் அல்லது முகம் கொடுக்கலாம் என்ற தீர்வுகளையும் அறிந்துகொள்ளலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சமூக பிரச்சனைகளை எதிர்நோக்கும் இளைஞர்கள் இந்த விளையாட்டில் தொடர்ந்தும் ஈடுபடும்போது அவர்கள் மத்தியில் மாறுபட்ட நன் சிந்தனைத் திறனைத் தூண்டும்.

'ஐயோ அலிஸ்' Google Play Store இல் தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.MinorMatters.AiyoAlice

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26