திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ  முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுப்பதற்கானே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக குரங்கு பாஞ்சான் இராணு முகாம், சூரங்கள் இராணுவ முகாம், தோப்பூர் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாம் மற்றும் மூதூர் தக்வா நகர் கடற்படை முகாம், கெல்கேயார் சென்டர் அமைந்திருக்கும் தனியார் காணியும் சேர்ந்து இருக்கும் கடற்படைமுகாம், புல்மோட்டையில் அமைந்திருக்கும் இராணுவ முகம் ஆகிய முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.